வாய் பேசாத சிறுமி பலாத்காரம் வாலிபர் சுட்டுப்பிடிப்பு
ராம்பூர்,உத்தர பிரதேசத்தின் ராம்பூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த காது கேளாத, வாய் பேசாத 11 வயது சிறுமியை கடந்த 15ம் தேதி முதல் காணவில்லை.
இந்நிலையில், நேற்று காலை அந்த சிறுமி உடலில் காயத்துடன், நிர்வாணமாக அருகேயுள்ள வயலில் கிடந்தார்.
அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, சிறுமியை டான் சிங், 24, என்ற வாலிபர் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
மேலும் சிறுமியின் பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடு வைத்ததுடன் அவரை நிர்வாணமாக விட்டுச் சென்றுள்ளார்.
இதையடுத்து டான்சிங்கை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு டான் சிங் தப்ப முயன்றார். போலீசார் திருப்பி சுட்டதில் டான் சிங் காலில் குண்டு பாய்ந்தது.
இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்