வெவ்வேறு சாலை விபத்தில் பெண் உட்பட 3 பேர் பலி
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த கேரட்டியை சேர்ந்தவர் மாதையன், 47. மினிடோர் வேன் டிரைவர். கடந்த, 15ல் அதே பகுதியை சேர்ந்த பழனியம்மாள், 42, என்பவரை வேனில் ஏற்றிக் கொண்டு வேலைக்கு சென்று திரும்பினார்.
மாலை, 5:00 மணியளவில் கெண்டகானப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த பழனியம்மாள் உயிரிழந்தார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
* கிருஷ்ணகிரி, புதுப்பேட்டையை சேர்ந்தவர் அசோக்குமார், 27, கூலித்தொழிலாளி. இவர், கடந்த, 15ல், ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் சென்றுள்ளார். மாலை, 4:00 மணியளவில் கண்ணு கண்ணன்கொட்டாய் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்ததில் இறந்தார். நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
* அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் மோகன்நாத், 45. தற்போது தளியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். கடந்த, 14 இரவு, 8:30 மணியளவில் மூக்கண்டப்பள்ளி அருகே பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார்.அவ்வழியாக வந்த கன்டெய்னர் லாரி மோதியதில் இறந்தார். ஓசூர் சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்