கழிவுநீர் சுத்திகரிப்பு மைய கட்டுமான பணிக்கு தரமற்ற கம்பி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

திருவள்ளூர்:திருவள்ளூரில் நடைபெற்று வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கான பணிகளில், தரமற்ற கம்பி பயன்படுத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருவள்ளூர் நகராட்சியில், 2013 முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. நகராட்சியில் இதுவரை, ஏழாயிரம் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை சேகரிக்க, நகரின் மூன்று இடங்களில், கழிவு நீர் சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
தேவி மீனாட்சி நகரில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு, அங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீர், புட்லுார் ஏரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தற்போது, கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் உள்ள இயந்திரம் முறையாக வேலை செய்யாததால், சுத்திகரிக்கப்படாமல் கழிவு நீர் அப்படியே குழாய் வாயிலாக வெளியேறி வருகிறது.
ஆங்காங்கே பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, நகர சாலைகளில் கழிவு நீர் வெளியேறி வருகிறது.
இதையடுத்து, சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டு வரப்படும் கழிவு நீரினை, சுத்தமான குடிநீராக மாற்றி கூவம் ஆற்றில் விடப்படும் வகையில், 10.48 கோடி ரூபாயில் மாற்று திட்டம் தயாரிக்கப்பட்டது.
இத்திட்டத்தின்படி, ஏற்கனவே உள்ள சுத்திகரிப்பு மையம் அருகில், நவீன சுத்திகரிப்பு மையம் அமைத்து, கழிவு நீரை நன்னீராக மாற்றி, கூவம் ஆற்றில் வெளியேற்றும் வகையில், பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் கம்பி துருப்பிடித்து தரமற்று உள்ளதாக, பகுதிவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பாதாள சாக்கடை நீரை சுத்திகரிப்பு செய்து நன்னீராக மாற்றும் திட்டத்திற்கு ஒப்பந்தம் எடுத்தவர்கள், கட்டுமான பணிக்கு துருப்பிடித்த இரும்பு கம்பிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், கட்டடத்தின் அஸ்திவாரம் வலுவிழப்பதுடன், கட்டுமான தரமும் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, கட்டுமான பணிக்கு பயன்படும் கம்பிகளின் தரத்தை நகராட்சி நிர்வாகம் பரிசோதனை செய்து, பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்