சிறை கைதி மீது தாக்குதல் ஆறு பேர் 'சஸ்பெண்ட்'

கூடலுார்:நீலகிரி மாவட்டம், கூடலுார், தேவர்சோலை பாடந்துறையை சேர்ந்தவர் நிஜமுதீன், 33. இவர், விற்பனைக்காக போதை பொருள் பதுக்கி வைத்துஇருந்த புகாரில், 12ல் தேவர்சோலை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து, 310 கிராம் கஞ்சா, 2.25 கிராம் எம்.டி.எம்.ஏ., என்ற போதை பொருட்களைபறிமுதல் செய்து, கூடலுார் கிளை சிறையில் அடைத்தனர். அங்கு, அவருக்கும், சிறை போலீசாருக்கும் திடீரென வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது, சிறை போலீசார் நிஜாமுதீனை தாக்கியதில், அவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
உறவினர்கள், சிறையில் நிஜாமுதீனை சந்தித்து, சம்பவம் குறித்து கேட்டதுடன், வீடியோ பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யாவிடம் புகார் அளித்தனர்.
கலெக்டர் உத்தரவில், வருவாய் துறையினர், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். பின்பு, கூடலுார் நீதிபதி சசின்குமார் நேரில் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து, கூடலுார் துணை சிறை கண்காணிப்பாளர் கங்காதரன், சிறை துறை காவலர்கள் மலர்வண்ணன், சின்னசாமி, தினேஷ் பாபு, அருண், கோபி ஆகியோர், நேற்று முன்தினம் இரவு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுஉள்ளனர்.
சம்பவம் தொடர்பாக, கோவை சிறை துறை டி.ஐ.ஜி., ஜெயபாரதி, நேற்று காலை கூடலுார் கிளை சிறையில் ஆய்வு செய்தார். கைதி நிஜாமுதீன் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்