பாதியில் பழுதாகி நின்ற 'லிப்ட்'
வேலுார்:வேலுார் மாநகராட்சி அலுவலகத்தில், 'லிப்ட்' பாதி வழியில் நின்றதால், அதில் சிக்கியோர் அலறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வேலுார், இன்பான்டரி சாலையிலுள்ள வேலுார் மாநகராட்சி அலுவலகத்தில், 3 அடுக்கு மாடி கட்டடத்துடன், வரி கட்டுதல், இ-சேவை மையம், பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் அலுவலகம், மாநகராட்சி கமிஷனர் அலுவலகம், கூட்டரங்கு இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதால், 3 அடுக்கு மாடிக்கு, 'லிப்ட்' வசதி உள்ளது.
நேற்று, மாநகராட்சி அவசர கூட்டம் நடந்த நிலையில், கவுன்சிலர்கள், கட்சியினர், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர். 'லிப்ட்'ல் அனைவரும் ஏறி சென்றனர். அதிக ஆட்கள் ஏறியதால், நடு வழியில், 'லிப்ட்' நின்றது. அதிலிருந்தோர் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.
பின்னர், வேலுார் தீயணைப்பு துறை வீரர்கள் வரைவழைக்கப்பட்டு அவசரகால வழியில் மீட்டனர். இதனால், லிப்டில் சிக்கி மீண்டோர் நிம்மதியடைந்தனர். இச்சம்பவத்தால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்