கல்விசார் போட்டி  - பிள்ளைச்சாவடி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விருது 

புதுச்சேரி: கல்விச்சார் போட்டியில், பிள்ளைச்சாவடி நா. வரதன் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் வெற்றி பெற்று விருதுகளை வென்றுள்ளனர்.

புதுச்சேரி கல்வித் துறை இயக்ககம் மற்றும் சமகரா சிக்ஷா இணைந்து ஆன்லைன் மூலம் கல்விசார் ஆடியோ வீடியோ 2024-25க்கான போட்டி நடத்தப்பட்டது. இதில், 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு ஆடியோ, வீடியோ மற்றும் இன்டர்ராக்டிவ் கன்டென்ட் உருவாக்கி ஆன்லைன் மூலம் அனுப்பி இருந்தனர். இதில், பிள்ளைச்சாவடி நா. வரதன் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் சசிக்குமார் ''வீடியோ போட்டியில் அடிப்படை பிரிவில்- முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆடியோ போட்டியில் அடிப்படை பிரிவில் இரண்டாம் பரிசாக 15 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் ,ஆசிரியர் செந்தமிழ் செல்வன் 'வீடியோ போட்டியில் நடுநிலை பிரிவில் மூன்றாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாய் மற்றும் விருதுகளை வென்றார்.

இதன் பரிசளிப்பு விழாவில் புதுச்சேரி கல்வி துறை இயக்குனர் பிரியதர்ஷினி, சமகரா சிக்ஷா மாநில திட்ட அலுவலர் தினகர், புதுச்சேரி முதன்மை கல்வி அலுவலர் குலசேகரன், துணை முதல்வர் சிவராமரெட்டி ஆகியோர் பங்கேற்று, வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினர். விருது வென்ற ஆசிரியர்களை கல்வித்துறை இணை இயக்குனர் (பெண்கள் கல்வி) ராமச்சந்திரன்,பள்ளி துணை ஆய்வாளர் அனிதா,பள்ளி தலைமை ஆசிரியர் ராதிகா ஆகியோர் பாராட்டினர்.

Advertisement