'தினமலர்' - 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு முன்பதிவிற்கு 2 நாட்களே உள்ளது

புதுச்சேரி: 'தினமலர்' நாளிதழ் நடத்தும் 'நீட்' மாதிரி தேர்விற்கு முன் பதிவு செய்வதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு, வரும் மே மாதம் 4ம் தேதி நாடு முழுதும் நடக்கிறது. 23 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுத உள்ளனர்.
தமிழகம், புதுச்சேரி யில் 'நீட்' நுழைவு தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் டாக்டர் கனவினை நிறைவேற்றிட 'தினமலர்' நாளிதழ், ஸ்பெக்ட்ரா நிறுவனத்துடன் இணைந்து, 'நீட்' மாதிரி தேர்வினை வரும் 20ம் தேதி நடத்த உள்ளது.
மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு குறித்த அச்சத்தை போக்க இந்த மாதிரி தேர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தேர்வு உண்மை யான 'நீட்' தேர்வு போன்றே நடத்தப்பட உள்ளது. இத்தேர்வில் பங்கேற்பதன் மூலம் தன்னம்பிக்கை பெற்று, 'நீட்' தேர்வை தயக்கமின்றி எழுதலாம்.
இத்தேர்விற்கு, முன்பதிவு செய்த மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இதற்கான முன்பதிவு கடந்த 14ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
கியூ.ஆர்.கோடினை ஸ்கேன் செய்து முன் பதிவு செய்யலாம். மாணவர்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.
மாதிரி தேர்விற்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. 'தினமலர்' நாளிதழின் இந்த அரிய வாய்ப்பை 'மிஸ்' பண்ணாதீங்க...
எப்படி பதிவு செய்வது
கியூ.ஆர் கோடினை ஸ்கேன் செய்து உள்ளே சென்றதும், 'தினமலர்' நாளிதழ், ஸ்பெக்ட்ரா நிறுவனத்தின் லிங்க் தோன்றும். அதனை கிளிக் செய்து, முகப்பு பகுதிக்கு உள்ளே சென்றதும், உங்களுடைய பெயர், இ-மெயில் முகவரி, மொபைல் எண், பள்ளி பெயர், இருப்பிடம், பாலினம் குறித்த கேள்விகள் பளீச்சிடும்.
அதனை கவனமாக பூர்த்தி செய்த பிறகு, நான் ரோபோர்ட் இல்லை என, கிளிக் செய்தால் போதும்.
மேலும்
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: ஹிந்து பெண்களுக்கு மகளிர் கமிஷன் ஆறுதல்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி
-
தி.மு.க., நகராட்சி தலைவர் அறையில் புகுந்தது கட்டு விரியன் பாம்பு!
-
ம.தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல்; பதவி விலகினார் துரை வைகோ