ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம்; அதிகாரிகள் அலட்சியத்தால் 3 மாதங்களாக மக்கள் அவதி

ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகிலும், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்திலும் அ.தி.மு.க., ஆட்சியில் அமைக்கப்பட்ட அம்மா உணவகம் ஆட்சிமாற்றம் காரணமாக பராமரிக்கப்படாமல் பெயரளவில் செயல்படுகிறது.
இங்கு மிகக்குறைந்த விலையில் இட்லி ரூ.1, தயிர் சாதம் ரூ.3, சாம்பார் சாதம் ரூ.5 என உணவு விற்பனை செய்வதால் ஏராளமானவர்கள் அம்மா உணவகத்திற்கு சாப்பிட வருகின்றனர்.
இந்நிலையில் ஜன.,1ல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் உணவக கட்டட கூரை பெயர்ந்து விழுந்தது.
உள்ளே இருந்த பணியாளர்கள் சமையல் அறை பக்கம் இருந்ததால்அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை. அன்று முதல் அம்மா உணவகம்பூட்டப்பட்டு தற்போதுவரை செயல்படவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டதால் தி.மு.க., பிரதிநிதிகள் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்துஉள்ளது.
எழை மக்கள், தொழிலாளர்கள் பயன்பெறும் அம்மா உணவகம் கட்டடத்தை சீரமைத்து மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாவட்டநிர்வாகம் உத்தரவிட வேண்டும்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏற்கனவே இருந்த கட்டடத்தை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தற்போது மலேரியா வார்டு அருகே ஒரு கட்டடம் ஒதுக்கியுள்ளனர்.
அந்த கட்டடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடக்கிறது. ஓரிரு வாரத்தில் பணிகள் முடிந்து விரைவில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்றனர்.
மேலும்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி
-
தி.மு.க., நகராட்சி தலைவர் அறையில் புகுந்தது கட்டு விரியன் பாம்பு!
-
ம.தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல்; பதவி விலகினார் துரை வைகோ
-
கனடாவில் இந்திய மாணவி சுட்டுக்கொலை; 4 மாதங்களில் 4 பேர் உயிரிழப்பு!
-
துணை ஜனாதிபதியை சந்தித்தார் கவர்னர் ரவி!