தமிழில் அரசாணைக்கு வரவேற்பு
சிவகங்கை: தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடும் அரசாணை தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக்கு சிவகங்கை தமிழ்சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் சார்பில் வெளியிடப்படும் அரசாணை, சுற்றறிக்கைகள், கலெக்டர்கள் அந்தந்த துறை அலுவலர்களுக்கு வெளியிடும் சுற்றறிக்கை உட்பட அனைத்தும் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.
அதே போன்று மக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் எழுத வேண்டும்.
அரசு ஊழியர்கள் அனைத்து பதிவுகளிலும் தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும். அனைத்து துறை செயலர்கள், கலெக்டர்கள், துறை அலுவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வருக்கு தமிழ்சங்கம் நன்றி
சிவகங்கை தமிழ் சங்கதலைவர் முருகானந்தம், செயலாளர் பாண்டியராஜன், பொருளாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் கூறியதாவது, அனைத்து தரப்பினரும் அரசின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ளும் விதமாக எளிய தமிழில் சுற்றறிக்கை வெளியிட வேண்டும்.
மக்களுக்கு எளிய தமிழில் நடவடிக்கை சார்ந்த பதில்களை வழங்க வேண்டும் என்ற உத்தரவால் அனைத்து தரப்பினரும் முழு பயன்பெறுவார்கள். இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கிறோம், என்றனர்.
மேலும்
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: ஹிந்து பெண்களுக்கு மகளிர் கமிஷன் ஆறுதல்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி
-
தி.மு.க., நகராட்சி தலைவர் அறையில் புகுந்தது கட்டு விரியன் பாம்பு!
-
ம.தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல்; பதவி விலகினார் துரை வைகோ