காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

மதுரை: நேஷனல் ஹெ ரால்ட் பத்திரிகை வழக்கில் குற்றப்பத்திரிகையில் சோனியா, ராகுல் பெயரை சேர்த்ததற்காக மத்திய அரசைக் கண்டித்து காங்கிரசார் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மதுரை தெற்கு மாவட்டம் சார்பில் கருமாத்துாரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் விஜயபிரபாகர் முன்னிலை வகித்தார்.

வட்டார காங்., நிர்வாகிகள் செந்தில்குமார், பூபதிபாண்டியன், முனியசாமி, சரவணபவன், பொன்மகாலிங்கம், பழனிகுமார், வீரபுத்திரன், ஓ.ஆர்.ராஜேந்திரன், பொம்மயன், ஜெயலிங்கம், கருப்பையா, தேசிங்குராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement