ஓய்வூதியர் நலவாரியம் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரையில் ஓய்வூதியர் நலவாரியம் அமைப்பது உட்பட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
எழுபது வயது நிறைவடைந்தோருக்கு ஓய்வூதியத்தில் 10 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.7850 வழங்க வேண்டும். மாதந்தோறும் மருத்துவப்படி ரூ. ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியர் நலவாரியம் அமைக்க வேண்டும் என்பது உட்பட பத்து அம்சங்களை வலியுறுத்தி பேசினர்.
மாவட்ட தலைவர் பாண்டிவேல் தலைமை வகித்தார். செயலாளர் சுப்புராமன் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஜெயபாலன், கவுரவ ஆலோசகர் வேலுமயில், துணைத் தலைவர் அய்யம்பெருமாள், மகளிர் அணித்தலைவர் வாசுகி உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் காளிமுத்து நன்றி கூறினார்.
மேலும்
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: ஹிந்து பெண்களுக்கு மகளிர் கமிஷன் ஆறுதல்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி
-
தி.மு.க., நகராட்சி தலைவர் அறையில் புகுந்தது கட்டு விரியன் பாம்பு!
-
ம.தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல்; பதவி விலகினார் துரை வைகோ