நேர்மைக்கு பாராட்டு

மதுரை: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே கீழே கிடந்த பர்ஸில் ரூ.7780, ஆதார் கார்டு, பான் கார்டு, ஏ.டி.எம்., கார்டு இருந்தது.

அதனை கண்டெடுத்து, போலீசிடம் ஒப்படைத்த ஜெய்ஹிந்த்புரம் ஆட்டோ டிரைவர் இளஞ்செழியனை திடீர்நகர் எஸ்.ஐ., ஜெய்சங்கர் பாராட்டினார். பர்ஸை தொலைத்த பழங்காநத்தம் சோமசுந்தர பாரதியிடம் போலீசார் வழங்கினர்.

Advertisement