தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்; தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சென்னியப்பன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஓய்வூதியர்கள் பங்கேற்று, பத்து அம்ச கோரிக்கைகளை கோஷங்கள் எழுப்பினர்.
கோரிக்கைகள்என்னென்ன
அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள், உதவியாளர்களுக்கு குறைந்தபட்சம் 7,850 ரூபாய் ஓய்வூதியம் வழங்கவேண்டும். ஆட்சிக்கு வந்த உடன், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என தேர்தலில் அளித்த வாக்குறுதியை தமிழக முதல்வர் ஸ்டாலின், உடனடியாக நிறைவேற்றவேண்டும். 70 வயது நிறைவடைந்த அனைத்து ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்கவேண்டும்.
மாதந்தோறும் ஆயிரம் ரூபாயாக மருத்துவப்படியை உயர்த்தி வழங்கவேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை முழுமையாக களையவேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை, 50 ஆயிரத்திலிருந்து, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கவேண்டும். ஒப்படைப்பு நிதி பிடித்த காலத்தை, 12 ஆண்டுகளாக குறைக்கவேண்டும்.
மூத்த உறுப்பினர் அனைவருக்கும் இலவச பஸ் பயண வசதி அளிக்கவேண்டும். ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு நல வாரியம் அமைக்கவேண்டும். மாவட்டந்தோறும் ஓய்வூதியர்களுக்கென பாதுகாப்பு இல்லங்கள் உருவாக்கவேண்டும். இவையே, ஓய்வூதியர்களின் பிரதான கோரிக்கைகள்.
மேலும்
-
லடாக்கில் 4ஜி, 5ஜி இணைப்பு: வெற்றிகரமாக ஏற்படுத்தியது இந்திய ராணுவம்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்