அரசு ஊழியர்கள் ஊர்வலம்..

தேனி: அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த வருவாய்த்துறை, கிராம உதவியாளர், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று தேனி ஒன்றிய அலுவலகம் முன் ஊர்வலம் துவங்கியது.

இதனை மாநில வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கம் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்தார். ஊர்வலம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று நிறைவடைந்தது.

அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் உடையாளிதலைமை வகித்தார். வாழ்வூதியம் கோரும் இயக்கத்தின் தலைவர் கிருபாவதி வரவேற்றார். அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் முகமது அலி ஜின்னா உள்பட பலர் பேசினர். வாழ்வூதியம் கோரும் இயக்கத்தின் மாவட்ட நிதி காப்பாளர் தேன்மொழி நன்றி தெரிவித்தார்.

Advertisement