கத்திமுனையில் விமானத்தை கடத்திய நபர்; நடுவானில் சுட்டுக்கொலை

பெலிஸ்: பெலிஸில் சிறிய ரக பயணிகள் விமானத்தை கத்தி முனையில் கடத்திய நபரை, பயணி ஒருவர் நடுவானில் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
@1brமத்திய அமெரிக்க நாடான பெலிஸ் எல்லையில் உள்ள கோரோஷல் எனும் சிறிய நகரில் இருந்து சுற்றுலா தலமான சான் பெட்ரோவுக்கு 14 பயணிகள் மற்றும் 2 விமானிகளுடன் சிறிய ரக விமானம் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென கத்திமுனையில் ஒருவர் விமானத்தை கடத்தினார். தன்னை இந்த நாட்டை விட்டு வெளியே கொண்டு சென்று விடுமாறு கோரிக்கை விடுத்தார். இதனால், விமானத்தில் பதற்றம் நிலவியது.
அப்போது, சுதாரித்துக் கொண்ட பயணிகளில் ஒருவர், தன்னிடம் இருந்த துப்பாக்கியால், அந்த நபரை சுட்டுக்கொன்றார். இந்த சம்பவத்தால் சுமார் 2 மணிநேரம் விமானம் வானில் வட்டமடித்து கொண்டிருந்தது. பிறகு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விமானத்தை கடத்த முயன்றது அமெரிக்காவைச் சேர்ந்த அகின்யேலா சாவா டெய்லர் என்பது தெரிய வந்தது. இந்த கடத்தல் சம்பவத்தின் போது, விமானி உள்பட 3 பேரை அவர் கத்தியால் குத்தியுள்ளார். அதன்பிறகு, சுற்றுலா பயணி தன்னிடம் இருந்து லைசென்ஸ் பெற்ற துப்பாக்கியால், அந்த நபரை சுட்டுக் கொன்றது தெரிய வந்துள்ளது.
வாசகர் கருத்து (11)
Sampath Kumar - chennai,இந்தியா
18 ஏப்,2025 - 16:44 Report Abuse

0
0
Reply
Anbuselvan - Bahrain,இந்தியா
18 ஏப்,2025 - 12:33 Report Abuse

0
0
பிரேம்ஜி - ,
18 ஏப்,2025 - 14:31Report Abuse

0
0
Reply
baala - coimbatore,இந்தியா
18 ஏப்,2025 - 09:31 Report Abuse

0
0
Reply
பிரேம்ஜி - ,
18 ஏப்,2025 - 09:27 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
18 ஏப்,2025 - 09:26 Report Abuse

0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
18 ஏப்,2025 - 09:14 Report Abuse

0
0
Reply
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
18 ஏப்,2025 - 09:02 Report Abuse

0
0
Reply
RAJ - dammam,இந்தியா
18 ஏப்,2025 - 08:29 Report Abuse

0
0
S Neelakkannan - ,இந்தியா
18 ஏப்,2025 - 15:48Report Abuse

0
0
Reply
மேலும்
-
லடாக்கில் 4ஜி, 5ஜி இணைப்பு: வெற்றிகரமாக ஏற்படுத்தியது இந்திய ராணுவம்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement