சிறுமி பலாத்காரம் 3 பேர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி பலாத்கார வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரை, கடந்த 11ம் தேதி 17 வயதுடைய சிறுவன் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு, சிறுமியின் 41 வயதுடைய தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலன் உடந்தையாக இருந்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சிறுவன், உடந்தையாக இருந்த தாய் மற்றும் கள்ளக் காதலன் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement