மொபட் திருடியவர் கைது

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் 10 மொபட்டுகள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

சேத்தியாத்தோப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், ரவிச்சந்திரன், தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் செல்வபாண்டியன் ஆகியோர் நேற்று பின்னலுார் அருகே பைபாசில் வாகன சோதனை செய்தனர்.

அப்போது, குமாரக்குடி பகுதியில் இருந்து வடலுார் நோக்கி சந்தேகப்படும்படி பைக்கில் வந்தவரை பிடித்து விசாரித்தனர். அதில், கடலுார் கங்கணாங்குப்பம் காலனியை சேர்ந்த சங்கர்,44; என்பதும், வடலுார், காடாம்புலியூர், காராமணிக்குப்பம், கடலுார், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதி சந்தைகளில் 10 மொபட்டுகளை திருடியது தெரிந்தது.

போலீசார் வழக்குப் பதிந்து சங்கரை கைது செய்து, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement