காட்சிப்பொருளான நகராட்சி வதைக் கூடம் செயல்படுமா? விதிமீறும் இறைச்சி கடைகளால் சுகாதாரக் கேடு

மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடு, மாடு, கோழி, பன்றி இறைச்சி கடைகள் உள்ளன. பொது இடங்களில் இவற்றை அறுக்க கூடாது. அவற்றின் தரத்தை கண்காணிக்க வேண்டும், சுகாதாரம் கடைபிடிக்க வேண்டியது அவசியம் போன்ற விதிகள் இருந்தும் இவற்றை யாரும் கண்டுகொள்வதில்லை.
கடைகளை ஒட்டியே பொது வெளியிலேயே மக்களின் கண் முன்னே ஆடுகள் அறுக்கப்பட்டு அவற்றின் கழிவுகள் சாக்கடையில் விடப்படுகிறது.
இது தவிர சில இடங்களில் சுகாதாரமற்ற முறையில் ரோட்டோரங்களிலேயே திறந்த வெளியில் விற்பனை செய்யப்படுகின்றன.
நோய்கள் பரவ காரணமான இறைச்சிக் கூடங்களை முறையாக பராமரித்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
மாவட்டத்தில் மாநகராட்சி அனைத்து நகராட்சிகளில் செயல்படாமல் வைக்கப்பட்டுள்ள நவீன ஆட்டிறைச்சிக்கூடங்களால் வெளியே தெரியாத பல்வேறு நோய் தொற்றுக்குமக்கள் காரணமாகி வருகின்றனர்.
இது தவிர கழிவுகளை திறந்தவெளியில் விடுவதால் டெங்கு, பறவை காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். திறந்தவெளியில் அறுக்கப்படும் கழிவுகளை எதிர்பார்த்து சுற்றி வரும் பராமரிப்பற்ற தெரு நாய்களாலும் பல்வேறு சிக்கல் ஏற்படுகிறது.
ராஜபாளையம்-தென்காசி ரோடு பழைய யூனியன் அலுவலகம் அருகே விதிமீறலை தடுப்பதற்காகஒரே இடத்தில் சுகாதாரமான முறையில் ஆடுகளை அறுக்கும் வகையில் நவீன வதைக்கூடம் நகராட்சி சார்பில் 16 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட நவீன ஆட்டிறைச்சி கூடம் எந்தவித செயல்பாடும் இன்றி காட்சி பொருளாக உள்ளது.
இங்கு வெட்டப்படும் ஆடுகளை மருத்துவர் பரிசோதித்து சான்றிதழ்தந்த பிறகு ஆடுகள் வெட்ட அனுமதிக்கப்படுகிறது. நாட்டின் உரிமையாளருக்கு டோக்கன் கொடுக்கப்படும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டது.
அங்கன்வாடி பள்ளி அருகில் உள்ள நிலையில் சுவர் ஏறி குதித்து சிலர் இதனை பாராக மாற்றி வைத்துள்ளனர்.
விலங்குகள், அதன் கழிவுகள் நேரடியாக சாக்கடையில் கலப்பதால் ஏற்படும் பல்வேறு நோய் தொற்றுகளை தடுக்க நவீன ஆட்டிறைச்சி கூடத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மேலும்
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்