மரக்கன்று நடும் விழா..

விருதுநகர்; விருதுநகர் மருத்துவக் கல்லுாரியில் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் சார்பில் மரக்கன்று நடும் விழா, சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் தலைமையில் நடந்தது.
மாவட்ட முதன்மை நீதிபதி ஜெயக்குமார் வரவேற்றார். மாநில சட்ட சேவைகள் ஆணைய வழக்கறிஞர் வசலகுமாரி அரசின் திட்டங்களை எடுத்துரைத்தார். பயனாளிகளின் பிரச்னைகளுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கல்லுாரி வளாகத்தில் நீதிபதி சுந்தர் அரசமரம், வேம்பு, புங்கை உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டார். மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், எஸ்.பி., கண்ணன், மருத்துவகல்லுாரி டீன் ஜெயசிங், தேசிய நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் பாக்கியலட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபானி, ஸ்ரீவில்லிப்புத்துார் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தேவராஜ், மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய செயலாளர் கவிதா பங்கேற்றனர்.
மேலும்
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்