சர்ச்சுகளில் புனித வெள்ளி வழிபாடு

விருதுநகர்; விருதுநகர் மாவட்ட சர்ச்சுகளில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப் பாதை வழிபாடு, சிறப்புத் திருப்பலிகள் நடந்ததில் கிறிஸ்தவர்கள் பலர் பங்கேற்றனர்.
நேற்று அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள்நடந்தன. மாலையில் இயேசு கிறிஸ்துவின் 14பாடுகளை தியானிக்கும்சிலுவைப் பாதை வழிபாடு, திருப்பலி, மறையுரை நடந்தன.
விருதுநகர் இன்னாசியார் சர்ச்சில் பாதிரியார் அருள்ராயன், உதவி பாதிரியார் தேவராஜ் தலைமையில், பாண்டியன் நகர் சவேரியார் சர்ச்சில் பாதிரியார் லாரன்ஸ், உதவி பாதிரியார் மரிய ஜான் பிராங்க்ளின், எஸ்.எப்.எஸ். பள்ளி முதல்வர் ஆரோக்கியம் ஆகியோர் தலைமையில் திருப்பலி நடந்தது.
நிறைவாழ்வு நகர் ஜெபமாலை அன்னை சர்ச்சில் பாதிரியார் அந்தோணிசாமி, ஆர்.ஆர். நகர் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச்சில் பாதிரியார் பீட்டர் ராய், உதவி பாதிரியார் சாமிநாதன், சாத்துார் இயேசுவின் திரு இருதயஆண்டவர் சர்ச்சில் பாதிரியார் காந்தி, ஒத்தையால் அற்புதக் குழந்தை இயேசு சர்ச்சில் பாதிரியார் ஜான் மில்டன் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி, மறையுரை நடந்தன.
இன்று இரவு 11.00 மணிக்கு அனைத்து சர்ச்சுகளிலும் புனித சனி பாஸ்கா திருவிழிப்பு திருப்பலியும், நாளை இயேசு உயிர்த்தெழுந்த தினத்தை முன்னிட்டு ஈஸ்டர் விழாவும் நடக்கின்றன.
* ஸ்ரீவில்லிபுத்துார் சி.எஸ்.ஐ. சர்ச்சில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை சபைகுரு பால் தினகரன் தலைமையில் நடந்தது. வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள பல்வேறு சர்ச்சுகளில் புனித வெள்ளி வழிபாடுகள் நடந்தன.
மேலும்
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்