தேசிய வருவாய் வழி திறன் தேர்வில் கோம்பை பள்ளி மாணவர்கள் சாதனை

உத்தமபாளையம்,; கோம்பை கன்னிகா பரமேஸ்வரி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மத்திய அரசின் வருவாய் வழிதிறன் தேர்வில் 10 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மத்திய அரசு 8 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி திறன் தேர்வு ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் தோறும் ரூ.ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படும்.
இந்தாண்டு நடந்த தேர்வில் மாவட்டத்தில் 85 பள்ளிகள் பங்குபெற்றன. அதில் கோம்பை கன்னிகா பரமேஸ்வரி நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 10 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து 10 ஆண்டுகளாக இச்சாதனை தொடர்கிறது.
சாதனை மாணவ மாணவிகளை பள்ளியின் செயலர் சேகர், பொருளாளர் ராமசுப்ரமணி ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள். பயிற்சியளித்த தலைமையாசிரியை சித்ரா மற்றும் ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட்டனர்.
மேலும்
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்