திண்டுக்கல் சர்ச்களில் புனித வெள்ளி

திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்ட சர்ச்களில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை பாதை வழிபாடு நடந்தது.

கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் 40 நாள் தவக்காலம் பிப்ரவரி 17-ம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது.

மார்ச் 28 ம் தேதி குருத்தோலை கொண்டாடப்பட்டது. அதுமுதல் ஈஸ்டர் பண்டிகை வரையிலான காலம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் பெரிய வியாழனை முன்னிட்டு பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று புனித வெள்ளியையொட்டி புனித வளனார் சர்ச், மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை சர்ச்சில் சிலுவை பாதை வழிபாடு, கூட்டு பிரார்த்தனை நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

கன்னிவாடி: குட்டத்துப்பட்டி புனித அந்தோணியார் சர்ச்சில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனைகள், சிலுவை பாதை யாத்திரை நடந்தது.

பாதிரியார் சவுந்தர் தலைமை வகித்தார்.

பாஸ்கு விழாவில் இயேசு கிறிஸ்து பிறப்பு குறித்து நாடகம் நடந்தது.

கு.ஆவரம்பட்டி புனித சவேரியார் சர்ச் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

பாதிரியார் ஜான்நெப்போலியன் விழா திருப்பலி நிறைவேற்றினார்.ஏ.வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, என்.பஞ்சம்பட்டி, ஆத்துார், வக்கம்பட்டி, கன்னிவாடி, காரமடை, கரிசல்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, எம்.அம்மாபட்டி உள்ளிட்ட சர்ச்களிலும் சிறப்பு திருப்பலி, கூட்டு பிரார்த்தனை நடந்தது.

நிலக்கோட்டை: கவிராயபுரம் குழந்தை இயேசு சர்ச்சில் சிறப்பு திருப்பலி, துாம்பா பவனி நடந்தது.

கொடைக்கானல், தேனி, திண்டுக்கல், மதுரை, அருப்புக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை பகுதியில் இருந்து பாதயாத்திரையாக சர்ச்சுக்கு வந்திருந்தனர்.

பாதிரியார்கள் இன்னாசி அற்புதராஜ், லாரன்ஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

தொடர்ந்து நடந்த துாம்பா பவனியில் பெண்கள் சப்பரம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Advertisement