பழநியில் நாணய கண்காட்சி

பழநி; பழநி தெற்கு ரத வீதியில் தனியார் மண்டபத்தில் கோவை, சேலம் நாணய சங்கம் சார்பில் நாணய கண்காட்சி துவங்கியது.

வெளிநாட்டு நாணயங்கள், சேர, சோழ, பாண்டிய நாட்டு நாணயங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட நாணயங்கள், பிரிட்டிஷ் கால நாணயங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஸ்டாம்ப், பழங்கால கலைப் பொருட்கள், வாள், தாமிரம், செம்பு உள்ளிட்ட பொருட்களில் செய்யப்பட்ட பொம்மைகள், சிலைகள் காட்சி படுத்தப்பட்டன.

கண்காட்சி நாளை (ஏப்.20) வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோவை நாணய சங்கத் தலைவர் சரவணன், சேலம் நாணய சங்க தலைவர் ரியாஸ் ஹரிஹரன், கவின் செய்தனர்.

Advertisement