மகள் மாயம்

கிள்ளை; கிள்ளை பூராசாமி மண்டபத் தெருவை சேர்ந்தவர் மாலா, 42; இவரது, மகள் அபிநயாஸ்ரீ, 20; சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கல்லுாரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

கிள்ளை சிறப்பு சப் இன்ஸ் பெக்டர் தாமோதரன் வழக்குப் பதிந்து, அபிநயா ஸ்ரீயை, தேடி வருகிறார்.

Advertisement