மளிகை கடையில் திருட்டு; இரண்டு பேர் கைது

பரங்கிப்பேட்டை; மளிகைக் கடை கல்லா பெட்டியில் இருந்த ரூ. 4 ஆயிரம் பணத்தை திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

பரங்கிப்பேட்டை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் தில்லைநாயகி, 37; நல்லான்பிள்ளை தெருவில் மளிகைக் கடை வைத்துள்ளார்.

கடந்த 15ம் தேதி தில்லைநாயகியின் மாமியார் சுசீலா மளிகைக் கடையில் வியாபாரம் செய்துக் கொண்டிருந்தார்.

அப்போது, கடைக்கு வந்த பரங்கிப்பேட்டை கோட்டாத்தங்கரை தெரு ஷாஜகான் என்பவருடைய மகன் உதுமான் அலி, 27; அப்பாசாமி தெரு ஷேக் மைதீன் மகன் அலாவுதீன், 27; ஆகிய இருவரும் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.4 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

தையல்நாயகி புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து, மளிகைக் கடையில் இருந்த சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், உதுமான் அலி, அலாவுதீன் இருவரும் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

அதையடுத்து, பரங்கிப்பேட்டை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Advertisement