டிரைவர் மீது தாக்குதல்; லாரி உரிமையாளருக்கு வலை
நெட்டப்பாக்கம்; கூனிச்சம்பட்டு, அய்த்தலாம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ், 36; லாரி டிரைவர். மடுகரையை சேர்ந்த குணசேகரன் என்பவருக்கு லாரி ஓட்டி வருகிறார். இவர் கடந்த 15ம் தேதி லாரியில் லோடு ஏற்றிக் கொண்டு கோயம்புத்துார் சென்றார். அங்கு லோடு இறக்கியதற்கான பணத்தினை பெற்று வந்து குணசேகரனிடம் கொடுக்கவில்லை.
இது குறித்து குணசேகரன் கூனிச்சம்பட்டில் உள்ள ராஜேஷ் வீட்டிற்கு சென்று கேட்டார். பின், அவரை மடுகரை சடகோபால் சாலை அழைத்து வந்து, குணசேகரன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ராஜேைஷ தாக்கினர். இது தொடர்பாக வெளியில் கூறினால் பண மோசடி வழக்கு தொடர்வதாக குணசேகரன், ராஜேஷிடம் தெரிவித்துவிட்டு சென்றார். இதனால் மனமுடைந்த ராஜேஷ் வீட்டிற்கு சென்று பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.
அவரை, உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது தாய் பத்மா புகாரின் பேரில் மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து குணசேகரனை தேடி வருகின்றனர்.
மேலும்
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்