உரிமமின்றி சுற்றுலா படகு ஓட்டியவர் மீது வழக்கு பதிவு
புதுச்சேரி; உரிமம் இல்லாமல் சுற்றுலா படகை ஓட்டியவர் மீது, கடலோர காவல் படையினர், வழக்குப் பதிந்து, படகை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி மெரினா பீச், வம்பாகீரப்பாளையம் ஆகிய பகுதியில் இருந்து சுற்றுலா படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. சில படகுகள் அரசு அனுமதியின்றியும், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், படகு ஓட்டுபவருக்கு முறையாக பயிற்சி அளிக்காமல் இயக்கப்படுவதாக புகார் எழுந்தது.
கடந்த 5ம் தேதி, மெரினா கடற்கரையில் இருந்து தனியார் சுற்றுலா படகில் 10 பயணிகள் சென்றனர். தேங்காய்த்திட்டு துறைமுகம் அரிக்கன்மேடு அருகே படகு சென்றபோது, படகு கவிழ்ந்தது, ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால், அனைவரும் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து, கலெக்டர் குலோத்துங்கன், கடந்த 10ம் தேதி மெரினா கடற்கரை அருகே உள்ள படகு குழாமை பார்வையிட்டு, அரசு அனுமதியுடன் படகுகள் இயக்கப்படுகிறதா, சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும், படகுகளின் பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு செய்தார். அதிக பயணிகளை ஏற்றி செல்ல கூடாது, சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் என, படகு உரிமையாளர்களிடம் அறிவுறுத்தினார்.
இந்நிலையில், தேங்காய்த்திட்டு துறைமுகம் அருகே அதிவேகமாக சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று சென்றது. கடலோர காவல் படையினர், அந்த படகை நிறுத்தி விசாரணை நடத்தினர். படகை ஓட்டியவர் வீராம்பட்டினத்தை சேர்ந்த விஷ்ணு, 21, என்பதும், உரிமம் இல்லாமல் படகை ஓட்டியதும் தெரியவந்தது. அதையடுத்து, அவர் மீது வழக்கு பதிந்து, படகை பறிமுதல் செய்தனர்.
மேலும்
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்