கேலோ இந்தியா விளையாட்டு விழா புதுச்சேரி அணிக்கு வீரர்கள் தேர்வு

புதுச்சேரி; பீகாரில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு விழாவிற்கு புதுச்சேரி அணிக்கான வீரர்கள் தேர்வு முகாம் நடந்தது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு விழா வரும் மே 4ம் தேதி முதல் 25ம் தேதி வரை பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ளது. 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் இப்போட்டியில், புதுச்சேரி மாநிலம் சார்பில் பங்கேற்க மல்லர் கம்பம் மற்றும் செட்டக் சக்ரா போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான வீரர்கள் தேர்வு முகாம் நேற்று முன்தினம் புதுச்சேரி, லாஸ்பேட்டை உள்விளையாட்டரங்கில் நடந்தது. காலையில் நடந்த மல்லர் கம்பம் போட்டியில் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும், மதியம் நடந்த செட்டக் சக்ரா போட்டியில் 10, மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவர்களில் மல்லர் கம்பம் போட்டிக்கு, தலா 6 மாணவ, மாணவிகளும், செட்டக் சக்ரா போட்டிக்கு தால 3 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள், பீகாரில் நடைபெறும் போட்டியில் புதுச்சேரி மாநிலம் சார்பில் பங்கேற்க உள்ளனர். இத்தேர்விற்கான ஏற்பாடுகளை விளையாட்டு துறை துணை இயக்குநர் வைத்தியநாதன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
மேலும்
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்