சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்
புதுச்சேரி; ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு அலுவலங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என, அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை;
புதுச்சேரி மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து நாளுக்கு நாள் மக்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு விடுத்த கோரிக்கை அடிப்படையில் அனைத்து போக்குவரத்து சிக்னல்களிலும் பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல புதுச்சேரியில் குடிநீர் பிரிவு சார்பில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முன்னுதாரணமாக முக்கிய இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் முகாம் அமைக்கப்பட்டு தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனை, அஜந்தா சிக்னல் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பந்தல் அமைத்து குடிநீர் வழங்கப்படுகிறது. இதனை அரசு மேலும் நீட்டித்து அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாசில்தார் அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றிலும் பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு சார்பில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.
மேலும்
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்