'நீட்' மாதிரி தேர்வு அறைக்குள் மாணவர்கள் கொண்டு வர தடை செய்யப்பட்ட பொருட்கள்

புதுச்சேரி; புதுச்சேரியில் வரும் 20ம் தேதி நடக்கும் நீட் மாதிரி தேர்வு அறைக்குள் மாணவர்கள் கொண்டுவர தடை செய்யப்பட்ட பொருட்களின் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் தினமலர் நாளிதழ், ஸ்பெக்ட்ரா நிறுவனத்துடன் இணைந்து, நீட் மாதிரி தேர்வினை நாளை 20ம் தேதி நடத்துகிறது.
புதுச்சேரி புது பஸ்டாண்ட், மங்கலட்சுமி பின்புறம் உள்ள ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நீட் மாதிரி தேர்வு நடக்கிறது.
நீட் மாதிரி தேர்வு அறைக்குள் மாணவர்கள் கொண்டுவர தடை செய்யப்பட்ட பொருட்களின் விபரங்கள்;
l நீட் தேர்வு அறைக்கு செல்லும் தேர்வர்கள் தீவிர தணிக்கைக்கு பிறகு அனுமதிக்கப்படுவர்.
l எழுதப்பட்ட, அச்சடிக்கப்பட்ட தாள்கள், குறிப்புகள், ஜியோமென்ட்ரி அல்லது பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பவுச், கால்குலேட்டர், பென், ஸ்கேல், ரைட்டிங் பேடு, பென் ட்டிரைவ், எரேசர், லாக் டேபிள், எலக்ட்ரானிக்ஸ் பென், ஸ்கேனர் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
l மொபைல் போன், புளூடூத், இயர் போன்ஸ், மைக்ரோ போன், பேஜர், ெஹல்த் பேன்ட் உள்ளிட்ட தொலை தொடர்பு கருவிகளும் கொண்டு வர அனுமதி இல்லை.
l வாலட், காகல்ஸ், ஹாண்ட் பேக்ஸ், பெல்ட், கேப் கொண்டு வர அனுமதி இல்லை.
l எந்த வகையான வாட்ச், ரிஸ்ட் வாட்ச், பிரேஸ் லெட், கேமராவுக்கும் அனுமதி இல்லை.
l காதணி, வளையல், மூக்குத்தி உள்பட எந்த வகையான ஆபரணங்கள், மெட்டாலிக் பொருட்களும் கொண்டுவர கூடாது.
l காபி, டீ, ஸ்நாக்ஸ், கூல்ட்ரிங்ஸ், வாட்டர் பாட்டீல் உள்ளிட்ட எந்த வகையான உணவு பொருட்களையும் திறந்த நிலையிலோ அல்லது மூடியோ கொண்டுவர கூடாது.
l மைக்ரோசிப், கேமரா, புளூடூத் உள்ளிட்ட கருவிகளை உடலில் மறைத்து எடுத்து வர அனுமதி இல்லை.
l தேர்வறையில் தேர்வர்கள் கொண்டு வரும் பொருட்களை வைக்க எந்த வசதியும் செய்யப்படாது. எனவே பால் பயிண்ட் பேனாவை தவிர வேறு ஏதும் கொண்டு வர வேண்டாம்.
l தேர்வர்கள் மதம், கலாசார ரீதியாக பொருட்களை அணிந்து இருந்தால் 2:00 மணி நேரத்திற்கு முன்பாக தகவல்களை தேர்வறையில் தெரிவிக்க வேண்டும். இதனால் அவர்களை சோதனை செய்வும், எந்த கடைசி நேர பதட்டம் இன்றி தேர்வினை எதிர் கொள்ளவும் முடியும்.
உடை கட்டுப்பாடுகள்
l மென்மையான நிறத்தில் ஆடை அணிந்திருக்க வேண்டும். மாணவர்கள் அரைக்கை சட்டை அணிய அனுமதி உண்டு. முழுக்கைச் சட்டை அல்லது ெஹவி குளோத் அணியக்கூடாது. பாரம்பரிய, கலாசார உடை அணிந்து வந்தால் அது தொடர்பாக தேர்வு அறைக்கு வருவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக தெரிவிக்க வேண்டும். இது சோதனை மேற்கொள்ளவும், கடைசி நேர பதட்டம் இல்லாமல் தேர்வுகளை எழுதலாம்.
l தேர்வறையில் செருப்பு, சேன்டல்ஸ் லோ ஹீல்ஸ் அணிந்து வரலாம்.
l தேர்வறைக்கு ஷூ அணிந்து வரை அனுமதி இல்லை.
மேலும்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது