விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

திருக்கனுார்; சந்தை புதுக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.

பள்ளியின் பொறுப்பு ஆசிரியர் கனவா சையது தலைமை தாங்கினார். ஆசிரியை ஜெயமாலினி வரவேற்றார். பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, மாணவர்களுக்கு இலவச விளையாட்டுச் சீருடை, காலணிகள் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்த தனியார் கம்பெனி ஊழியர் ராகுலுக்கு நினைவு பரிசு வழங்கி நன்றி தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீஜா, அக்பர் ராஜ், சுகீத்தா, சாந்தி, கலைச்செல்வி, சுபாஷினி, கெஜலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை சங்கீதா தொகுத்து வழங்கினார். ஆசிரியர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.

Advertisement