புதுச்சேரி வீரர்கள் உத்தரபிரதேசம் பயணம்

புதுச்சேரி; உத்தரபிரதேசத்தில் 47வது ஜூனியர் பிரிவு ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் புதுச்சேரி வீரர்களுக்கான வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.

உத்தரபிரதேச மாநிலம் அக்பர்பூரில் 47 வது ஜூனியர் பிரிவு ஆண்களுக்கான ஹேண்ட்பால் சாம்பியன் ஷிப் போட்டிகள் வரும் 20 முதல் 24ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில், புதுச்சேரி மாநில அமெச்சூர் ஹேண்ட்பால் சங்க வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதையொட்டி, உத்தரபிரதேச மாநிலம் செல்லும் ஹேண்ட்பால் அணி வீரர்களுக்கான வழியனுப்பும் நிகழ்ச்சி உப்பளம், ஹேண்ட்பால் பால் விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

சங்கத்தின் பொதுச் செயலாளர் நாராயணசாமி தலைமை தாங்கினார். பிரான்ஸ் தொழிலதிபர்கள் பிளம்பன் ஹென்றி, ரமேஷ்ராவ் ஆகியோர் சீருடை வழங்கி வீரர்களை வழியனுப்பினர். சங்க மாவட்ட செயலாளர் கருணை பிரகாசம், விஜயராஜ், ஆறுமுகம், புகழ், பாபுலால், வழக்கறிஞர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement