நுால் வெளியீட்டு விழா

புதுச்சேரி; பேராசிரியர் இளங்கோவன் எழுதிய நுால்கள் வெளியீட்டு விழா, தொல்காப்பிய அறிஞர்களுக்குப் பாராட்டு விழா, புதுவை தமிழ்ச்சங்கத்தில் நடந்தது.

புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். முருகையன் வரவேற்றார். ராமானுஜம், சடகோபன் ஆறு செல்வம், அசோகன், கோவலன் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம் பங்கேற்று, பேராசிரியர் இளங்கோவன் எழுதிய இணைய ஆற்றுப்படை தொடரும், தொல்காப்பிய மரபு ஆகிய நுால்களை வெளியிட்டு, வாழ்த்தினார்.

நுாலினை தொழிலதிபர் குணத்தொகையன், முனுசாமி, சக்திகுமார், பேராசிரியர்கள் பெரியாண்டி, அருள்செல்வம், திருவாசகம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக மயிலம் பொம்மபுர ஆதினம், இருபதாம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் பங்கேற்று, தொல்காப்பிய அறிஞர் தஞ்சாவூர் கலியபெருமாள், பேராசிரியர்கள் ஆரோக்கியநாதன், சிவகாசி, கமலா, துரை முத்துக்கிருட்டினன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கினார்.

பேராசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Advertisement