வாகனங்களை மறித்து கட்டாய வசூல்; ஓவர் கோட் பெண்கள் அடாவடி

வில்லியனுார்; வில்லியனுார் அருகே ஓவர் கோட் அணிந்த இளம் பெண்கள், வாகனங்களை நிறுத்தி கட்டாய வசூலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வில்லியனுார் அடுத்த பத்துக்கண்ணு-திருக்கனுார் சாலை - பிள்ளையார்குப்பம் கிராம நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் நேற்று காலை 10:00 மணி முதல் மாலை வரை பல்வேறு வண்ண ஓவர் கோட் அணிந்த 8 பெண்கள் அவ்வழியே சென்ற பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி, ஆந்திர மாநிலம் அன்னை தெேரசா பாய் டிரஸ்டி என்ற பெயரிலான நோட்டீசை கொடுத்து, அறக்கட்டளை பெயரில் கட்டாய வசூலில் ஈடுபட்டனர்.
கட்டாய வசூலில் ஈடுபட்ட பெண்களிடம் வாகன ஓட்டிகள் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்தி கட்டாய வசூல் செய்வது தவறான செயலாகும். வசூல் வேட்டையில் ஈடுபடும் பெண்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது