108 சங்காபிேஷகம்

புதுச்சேரி; சாரம் நாகமுத்துமாரியம்மன் கோவிலில் 108 சங்காபிேஷக விழா நேற்று நடந்தது.

சாரம் முத்து விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி, நாகமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 108 சங்காபிேஷகம் நேற்று நடந்தது.

இதையொட்டி மாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை, 7:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நாக முத்து மாரியம்மனுக்கு கலசாபி ேஷகம், 108 சங்காபி ேஷகம் நடந்தது.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பொன் நீலகண்டன் செய்திருந்தார்.

Advertisement