கட்டி முடிக்கப்பட்ட மாடிப்படியில் தேவைக்கு ஏற்ப மாற்றம் செய்யலாமா?

வீடுகளில் ஒவ்வொரு பாகமும் எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்வோம். இதில் கட்டட அமைப்பியல் பொறியாளர், கட்டட வடிவமைப்பாளர் ஆகியோரின் வழிகாட்டுதல் அடிப்படையிலேயே ஒவ்வொரு பாகமும் திட்டமிடப்படுகிறது.
பொதுவாக ஒரு வீடு என்றால் அதில் எந்த இடத்துக்கு உயர் முன்னுரிமை என்பதை முடிவு செய்து, அதை பிரதானப்படுத்தி தான் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த அடிப்படையில் தான் கட்டடத்தின் அனைத்து பாகங்களுக்கான இடம் ஒதுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த வகையில் குறைந்த பரப்பளவு மனையில் வீடு கட்டுவோர் தான் குறிப்பிட்ட சில பாகங்களுக்கான அளவுகளை குறைப்பதில் ஈடுபடுகின்றனர். இது போன்ற மனைகளில் வீடு கட்டும் நிலையில் பக்கவாட்டு காலியிடம் போதிய அளவுக்கு கிடைக்காது என்பதால் ஜன்னல்களுக்கு சன்ஷேடுகள் இருக்காது. பக்கவாட்டு காலியிடம் இல்லை என்பதால், பல இடங்களில் இது போன்ற வீடு கட்டுவோர் ஜன்னல்களை கூட தவிர்ப்பதை பார்க்க முடிகிறது. ஆனால், மாடிப்படி போன்ற விஷயங்களில் இடப்பற்றாக்குறையால் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்.
தனி வீடுகளில் மாடிப்படி கட்டும் போது மிச்சம் மீதியான இடத்தை தான் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு மிக குறைந்த அளவு இடத்தை பயன்படுத்தி மாடிப்படி கட்டுவோர், அதில் படியின் அகலத்தை குறைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக, மாடிப்படியில் லேண்டிங் ஏரியா எனப்படும், நடுவில் நின்று திரும்பும் பகுதியில் போதிய இடவசதியை ஏற்படுத்த வேண்டும். ஆனால், இடப்பற்றாக்குறை காரணமாக, ஓரிரு நபர்கள் மட்டுமே ஒரு சமயத்தில் நிற்கும் அளவுக்கு தான் பல இடங்களில் லேண்டிங் பகுதி அமைக்கப்படுகிறது.
ஆனால், இதுபோன்று மாடிப்படி அமைக்கும் நிலையில் சாதாரணமாக மனிதர்கள் நடமாடுவதற்கும் பிரச்னை ஏற்படுகிறது. பயன்பாட்டு நிலை பிரச்னையை உணர்ந்து இந்த பகுதியை விரிவாக்கம் செய்யலாம் என்ற எண்ணம் எழுந்தாலும், அது நடக்காது என்று பலரும் அமைதியாகிவிடுகின்றனர்.
இன்றைய சூழலில், மாடிப்படியின் லேண்டிங் ஏரியா பாகத்தை விரிவாக்கம் செய்ய கட்டுமான தொழில்நுட்ப ரீதியாக வாய்ப்புகள் உள்ளன. ஆனால், வெளிப்புறத்தில், இதற்கான போதிய இடம் இருந்தால் போதும், கூடுதல் கம்பி கட்டும் வேலையை செய்து கான்கிரீட் போட்டு லேண்டிங் ஏரியாவை விரிவாக்கலாம்.
பெரும்பாலான இடங்களில் வீட்டின் முன்புறத்தில் மாடிப்படி அமைப்பதால், லேண்டிங் ஏரியா என்பது காம்பவுண்ட் சுவருக்கு மேல் தான் வரும். இங்கு, 2 அடி வரை வெளியில் நீட்டிக்கொண்டு இருக்கும் வரையில் விரிவாக்கம் செய்வதால் சாலையில் பிரச்னை வருமா என்பதை பார்த்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.
மேலும்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது