அரசு தடை செய்த இடங்களில் வீடு கட்ட முயற்சிப்பது நல்லதல்ல!

சொந்தமாக நிலம் வாங்கி அதில் விருப்பப்படி வீடு கட்டி குடியேற வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர். இதை வாழ்நாள் இலக்காக வைத்து, அது நிறைவேறுவதற்காக கடினமாக உழைக்கும் மக்கள் இதில் சட்ட ரீதியான அடிப்படை விஷயங்களை சரியாக புரிந்து செயல்பட வேண்டும்.
வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கும் நிலையில், அது தொடர்பான விஷயங்களில் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். வீடு கட்டுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சட்ட ரீதியாக சில பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதை அறியாமல் நிலம் வாங்குவோர் பல்வேறு பிரச்னைகளில் சிக்குகின்றனர்.
மேலோட்டமாக பார்த்தால் அனைத்து நிலமும் வீடு கட்டி மக்கள் வசிக்க ஏற்றது போன்று தான் தெரியும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. அதே நேரம் குறிப்பிட்ட சில காரணங்களால் சில பகுதிகளில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும் என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
நிலம் வாங்கும் நிலையில்,அது அமைந்துள்ள பகுதி குறித்த அடிப்படை விஷயங்களை முறையாக ஆராய்ந்தால், தடை விதிக்கபடுவதற்கான காரணங்கள் புரியும். அதாவது, நீர் நிலைகளுக்கு மிக நெருக்கமாக உள்ள பகுதிகளில் வீடு கட்டி குடியேறினால் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும்.
அதே போன்று, ரயில் பாதைகளை ஒட்டிய நிலங்களில் வீடு கட்டுவதற்கும் அனுமதி வழங்கப்படாது. ரயில்வே துறையின் நிலத்துக்கு வெளில் தான் எங்கள் மனை அமைந்துள்ளது, அதனால் என்ன பிரச்னை வந்துவிடும் என்று நீங்கள் கேள்வி எழுப்பினாலும் குறிப்பிட்ட தொலைவுக்கு வீடுகள் இருப்பதற்கு அனுமதி இல்லை.
இதே போன்று, நீர் வழித்தடங்கள், குவாரிகள் அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் குறிப்பிட்ட தொலைவுக்கு வீடு கட்டுவதற்கு நிர்வாக ரீதியாக அரசு தடை விதித்து இருக்கும். இது மட்டுமல்லாது, பாரம்பரிய சின்னங்கள் அமைந்துள்ள பகுதி, பாதுகாப்பு துறை தொடர்பான பகுதிகளை ஒட்டிய தனியார் நிலங்களில் வீடு கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அபாயகரமான தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளிலும் வீடு கட்ட அனுமதிப்பது இல்லை. ஒவ்வொரு பகுதி நிலமும் அதன் பயன்பாடு அடிப்படையில் வகைபடுத்தப்பட்டு உள்ள நிலையில் மக்கள் குடியேறினால் பாதிப்பு ஏற்படும் என்பது வரையறுக்கப்பட்டு தடை விதிக்கப்படுகிறது.
இது போன்று தடை விதிக்கப்பட்ட பகுதிகள் எவை என்பதை சரியாக புரிந்து செயல்பட்டால், பாதுகாப்பு குறைவான பகுதிகளில் வீடு கட்டுவதை தவிர்க்கலாம். மக்களின் நலனை கருத்தில் கொ்டு தான் அரசு துறைகள் இது போன்ற தடை ஆணைகளை பிறப்பித்துள்ளன என்பதை மக்கள் சரியாக புரிந்து செயல்பட வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.
மேலும்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது