தடுப்பு இன்றி காணப்படும் கீழ்வேண்பாக்கம் குளம்

நெமிலி,
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த, கீழ்வேண்பாக்கம் கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவில் குளம் உள்ளது. இந்த குளத்தில் தேங்கும் தண்ணீர் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கும் மற்றும் ஆடு, மாடுகளின் குடிநீர் தாகத்தை தீர்க்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த குளம் போதிய பராமரிப்பு இன்றி இருப்பதால், குளத்தின் கரை மற்றும் குளத்தின் நடுவே சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.
இதுதவிர, கீழ்வேண்பாக்கம் கிராமத்தில் இருந்து, மேல்வேண்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் தடுப்பு இன்றி குளம் ஆபத்தாக இருப்பதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது.
இதனால், இரவு நேரங்களில் வாகன விபத்து மற்றும் பகலில் ஆடு, மாடுகள் சீமைக்கருவேல மர புதரில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் குளத்தை துார்வாரவும், தடுப்பு வேலி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும்
-
குமரி கண்ணாடி பாலத்தில் பராமரிப்பு பணிகள் நிறைவு * நேற்று முதல் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி
-
வாலிபரை தாக்கிய8 பேர் மீது வழக்கு
-
மின் துாக்கிக்கு சான்றிதழ் பெறாததால் சிக்கலில் தேனி ஒன்றிய அலுவலகம் கட்டுமான மின் இணைப்பு கட்டணம் செலுத்தும் அவலம்
-
குப்பை பிரச்னையில் லாரி ஏற்றி கொல்ல முயற்சிஅலறியடித்து ஓடிய பெண்கள்; டிரைவர் மீது வழக்கு
-
கூணங்கரணை மயான பாதையில் சிமென்ட் சாலை அமைக்க கோரிக்கை
-
மாரியம்மன் திருவீதி உலா