வாலிபரை தாக்கிய8 பேர் மீது வழக்கு



குளித்தலை:குளித்தலை அடுத்த கண்ணமுத்தம்பட்டியை சேர்ந்தவர் நவீன்குமார், 19; விவசாய தொழிலாளி. கோவில் திருவிழாவிற்கு, தன்னுடன் கல்லுாரியில் படிக்கும் நண்பர்களை அழைத்திருந்தார்.

கடந்த, 17ல் வேலாயுதபாளையம் வி.ஏ.ஓ., ஆபீஸ் அருகே அதே ஊரை சேர்ந்த குமார், சதீஷ்குமார், பிரதீப், தர்மேஷ், சூர்யா, விமல், ராஜ், சிவசக்தி, விஜி, ஆகிய எட்டு பேர் சேர்ந்து, நவீன்குமாரை தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த நவீன்குமார் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார், எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விமல்ராஜ், 19, என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement