ஆதிகேசவர் கோவில் தேரோட்டம்

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார ஸ்வாமி கோவில் உள்ளது.

கடந்த, 13ம் தேதி பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து, மூன்றாவது நாளில் பிரபல உத்சவமான கருட சேவை வெகுவிமரிமையாக நடந்தது.

இதையடுத்து, பிரம்மோத்சவத்தின் ஏழாவது நாளான நேற்று, தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது. இந்த தேர் வடம் பிடித்து பக்தர்கள் கோவிந்தா என, கோஷம் எழுப்பி தேரை இழுத்தனர்.

அதேபோல், கமலவல்லி சமேத வைகுண்டப்பெருமாள் மற்றும் எம்பார் சுவாமி கோவிலில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது.





Advertisement