வக்ப் திருத்த சட்டத்தை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்





அரவக்குறிச்சி:மத்திய அரசு கொண்டு வந்துள்ள, வக்ப் திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி, அரவக்குறிச்சி உரூஸ் மைதானத்தில், கரூர் மாவட்ட தலைவர் முகமது சலீம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ கலந்துகொண்டார். இதில், மத்திய அரசை கண்டித்தும், வக்ப் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். அரவக்குறிச்சி தி.மு.க., நகர செயலாளர் மணி, மேற்கு ஒன்றிய செயலாளர் மணியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின், சட்டப்பிரிவு மாநில துணைத்தலைவர் முகமது பஜ்லுல் ஹக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement