மெழுகு பேப்பர், பிளாஸ்டிக்பயன்பாடு கட்டுப்படுத்தப்படுமா?



அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஓட்டல், பேக்கரி, பாஸ்ட் புட் கடை, தள்ளுவண்டி கடைகள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. இங்கு, ஏராளமான மக்கள் சென்று, உணவு வகைகளை வாங்கி சென்று பயன்படுத்தி வருகின்றனர்.

அவ்வாறு இட்லி, தோசை, சில்லி சிக்கன் உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கும்போது, சூடான உணவு பொருட்களை, மெழுகு தடவிய பேப்பர், பிளாஸ்டிக் பேப்பர்களில் பார்சல் கட்டி கொடுக்கின்றனர். டீ கடைகளில் கண்ணாடி டம்ளருக்கு பதிலாக, மெழுகு தடவிய பேப்பர் கப்புகளில் டீ வழங்குகின்றனர்.

ஈரப்பதத்தை உறிஞ்சுவதை தடுக்க, பேப்பர் கப்புகளில் மெழுகு போன்ற ரசாயனத்தை பூசுகின்றன. அதேபோல், பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட எண்ணெய்களில் பொரிக்கப்படும் தின்பண்டங்கள், செய்தித்தாள்களில் மடித்து தருகின்றன.
இதில் உள்ள ரசாயனங்கள், சூட்டில் உணவு பொருட்களுடன் கரைந்து, கேன்சர் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement