கோவில் விழாவில் தகராறால்மாயம்: உறவினர்கள் மறியல்




குளித்தலை:குளித்தலை அடுத்த கண்ணமுத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் மகன் நவீன், 18; கண்ணமுத்தம்பட்டி காளியம்மன் கோவில் திருவிழாவின்போது, அதே ஊரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வீட்டிற்கு உறவினராக வந்த லோகேஷ் என்பருக்கும், நவீனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம், நீண்ட நேரமாகியும் நவீன் வீட்டிற்கு வரவில்லை. இவரது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் விசாரித்தனர்.


ஆனால், நவீன் குறித்து எந்த தகவலும் இல்லை. இதனால், ஆத்திரமடைந்த நவீனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், கண்ணமுத்தம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, பஞ்சப்பட்டியில் இருந்து கரூர் நோக்கி சென்ற அரசு பஸ்சை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த லாலாப்பேட்டை போலீசார், மறியலில் ஈடுபட்ட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement