லேப் டெக்னீஷியன்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும்

சென்னை:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் ரவீந்திரநாத் கூறியதாவது:

அரசு மருத்துவமனைகளில், 60 வயது நிரம்பிய நிலையில் பணியாற்றி வரும் துாய்மை பணியாளர்களுக்கு, பணிக்கொடை அளித்து பணி ஓய்வு வழங்க வேண்டும்.

மேலும், ஆரம்ப சுகாதார நிலைய நம்பிக்கை மையத்தில், லேப் டெக்னீஷியனாக பணியாற்றும் 808 பேருக்கு, நான்கு ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. இப்பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதுடன் பணி பாதுகாப்பும் வழங்க வேண்டும்.

தமிழக மக்கள் நல்வாழ்வு துறையின் புதிய அரசாணையால், தமிழகத்தில் ரத்த பரிசோதனை மையங்களின் இடவசதி குறித்த விதிமுறையால், 80 சதவீத சிறிய மையங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே, அரசாணையை அரசு திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement