அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

காரைக்குடி: காரைக்குடியில் நீட் தேர்வை ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக கூறிய தி.மு.க.,வை கண்டித்து அ.தி.மு.க., வினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டார். காரைக்குடி நகரச் செயலாளர் மெய்யப்பன் முன்னிலை வகித்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உமாதேவன், கற்பகம், குணசேகரன், நாகராஜன், தேவகோட்டை சேர்மன் சுந்தரலிங்கம், முன்னாள் சாக்கோட்டை சேர்மன் செந்தில்நாதன், முன்னாள் திருப்புத்துார் சேர்மன் நாகராஜன், காரைக்குடி மாநகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement