புதுடில்லி, ராஜஸ்தானுக்கு நாளை சிறப்பு ரயில்கள்

விருதுநகர்: பயணியரின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, புதுடில்லி மற்றும் பகத் கி கோதிக்கு சிறப்பு ரயில்களை, தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

திருநெல்வேலியில் இருந்து நாளை இரவு 10:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், வரும் 24ம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு நிஜாமுதீன் செல்கிறது. இந்த ரயில், கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர், வழியாக செல்லும்.

இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் - 20; இரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படும்.

மதுரையில் இருந்து நாளை காலை 10:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், வரும் 23ம் தேதி மதியம் 12:30 மணிக்கு, ராஜஸ்தான் மாநிலம், பகத் கி கோதி செல்லும். மறுமார்க்கத்தில் வரும் 24 அதிகாலை 5:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், 26ம் தேதி காலை 8:30 மணிக்கு, மதுரை வரும்.

இவ்விரு ரயில்களும் திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர் வழியாக செல்லும். ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள் -- 12; ஏ.சி., மூன்றடுக்கு எகனாமி படுக்கை வசதிப் பெட்டிகள் ஆறு; இரு சரக்கு பெட்டிகளுடன் இயக்கப்படும்.

மேற்கண்ட ரயில்களுக்கான முன்பதிவு துவங்கியது.

Advertisement