கோடை விடுமுறையில் ஆக்கப்பூர்வ திரைப்படங்கள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக, ஆக்கப்பூர்வமாக கழிக்கவும், நல்ல சிந்தனையை விதைத்து இலக்குகளை அடைய ஊக்கப்படுத்தும் வகையிலும் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளதாக கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.

கோடை விடுமுறையில் மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ஓவியம், நாட்டுப்புற கலைகள், போஸ்டர் தயாரித்தல், கதை சொல்லி, புத்தகம் பேசுதல், கலைப் பொருட்கள் தயாரித்தல், மெஹந்தி வரைதல், களிமண் பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி முகாம்கள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகின்றன.

இந்தாண்டு ஏப்., 25 முதல் மே 1 வரை பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கம், ஸ்ரீவில்லிபுத்துார் லயன்ஸ் மெட்ரிக் பள்ளி, ராஜபாளையம் ராஜுக்கள் கல்லுாரி, சிவகாசி ஐ.சி.ஏ.ஐ., அருப்புக்கோட்டை மினர்வா பப்ளிக் பள்ளி, காரியாபட்டி சேது பொறியியல் கல்லுாரி ஆகிய இடங்களில் மாணவர்களுக்கான திரைப்படங்கள் காலை 10:30 மணிக்கும், மதியம் 2:30 மணிக்கும் திரையிடப்படுகின்றன.

இதில், 14 வயதுக்குட்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களும் பங்கேற்கலாம். விருப்பமுள்ளவர்கள் 86082 04154ல் பதிவு செய்யலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

Advertisement