போலீஸ் செய்திகள் தேனி
பெண்ணிடம் செயின் பறிப்பு
தேனி: அரண்மனைப்புதுார் முத்தாலம்மன் கோயில்தெரு நவித்ரா 30. இவர் டூவீலரில் வயல்பட்டிக்கு சென்று வீடு திரும்பினார். சத்திரப்பட்டி அருகே அடையாளம் தெரியாத டூவீலரில் வந்த ஒரு நபர், நவீத்ராவை கீழே தள்ளினார். கவரிங் செயினை பறித்து சென்றார். போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற இருவர் கைது
தேனி: தேனி-போடி ரோட்டில் தீர்த்த தொட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த பாலார்பட்டி சுகுமாறன் 30, தேவாரம் ராஜ்குமார் 33 ஆகியோரை விசாரித்தனர். அவர்களிடமிருந்து 110 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். விசாரணையில் சிறுவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததை ஒப்புக்கொண்டனர். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மதுபாட்டில்கள் பறிமுதல்
தேனி: பூதிப்புரம் பகுதியில் பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., ஜீவானந்தம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் உள்ள கட்டண கழிப்பறை அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டிருந்த மஞ்சிநாயக்கன்பட்டி பெருமாள் 50, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பஸ் கண்ணாடி சேதம்
தேனி: ஆண்டிபட்டி அனுப்பபட்டி பாண்டி 42, கம்பம் அரசு டெப்போ பஸ் டிரைவர். இவர் தேனியில் இருந்து ஆண்டிபட்டி நோக்கி அரசு பஸ்சை ஓட்டி சென்றார். பஸ் தேனி அரசு ஐ.டி.ஐ., அருகே சென்ற போது, இவருக்கு பின்னால் சரக்கு வாகனத்தை ஒடைப்பட்டி நன்மாறன் ஓட்டி சென்றார். பஸ்சை முந்த முயற்சித்த போது, பஸ் முன்பகுதியில் சரக்கு வாகனம் மோதியது. இதில் பஸ்சின் கண்ணாடி சேதமடைந்தது. தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
புகையிலை பதுக்கிய இருவர் கைது
போடி: டி.வி.கே.கே., நகரை சேர்ந்தவர் முபாரக் 60. இவரது பெட்டி கடையில் அனுமதி இன்றி தடை செய்யப்பட்ட 6 புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து இருந்தார். இது போல கொக்கையர் பள்ளி அருகே வசிப்பவர் கண்ணன் 26. இவரது பெட்டி கடையில் அனுமதி இன்றி 35 புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து இருந்தார்.போடி டவுன் போலீசார் முபாரக், கண்ணன் இருவரையும் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து 41 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மது பதுக்கிய இருவர் கைது
போடி :அருகே ராசிங்காபுரம் சிங்காரவேல் தெருவை சேர்ந்தவர் பாரதி 36. இவர் அனுமதி இன்றி 15 மது பாட்டில்களை பதுக்கி வைத்து இருந்தார். போடி அருகே விசுவாசபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் 46. இவர் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக 10 மது பாட்டில்களை பதுக்கி வைத்து இருந்தார். போடி தாலுாகா போலீசார் பாரதி, வேல்முருகன் இருவரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும்
-
நக்சல் இல்லா முதல் கிராமம்; சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4000 கன அடியாக உயர்வு
-
3000 ஆண்டு பழமையான கல்வட்டம் செஞ்சி அருகே கண்டுபிடிப்பு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
வனத்துறை சோதனைச்சாவடியில் தானியங்கி பதிவு முறை அமல்; கேரளா வனத்துறை நவீன முயற்சி
-
முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்