தக்காளி விலை கடும் சரிவு 4 கிலோ ரூ.50க்கு விற்பனை

திருப்புவனம் : திருப்புவனத்தில் ஐம்பது ரூபாய்க்கு நான்கு கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டதால் ஏராளமானோர் வாங்கிச் சென்றனர்.

தமிழகத்தில் நாட்டு தக்காளி, பெங்களுரூ தக்காளி என இரண்டு ரகம் பயிரிடப்படுகிறது. நாட்டு தக்காளி பயிரிடுவதுகுறைந்து விட்டதால் பலரும் பெங்களுரூ தக்காளியையே வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

நேற்று திருப்புவனத்தில்பெங்களுரூ தக்காளி ஐம்பது ரூபாய்க்கு நான்கு கிலோ என சரக்கு வாகனத்தில் கொண்டு வந்து விற்பனை செய்தனர். பொதுமக்கள் பலரும் விரும்பி வாங்கி சென்றனர்.

வியாபாரிகள் கூறுகையில், ஒட்டன்சத்திரம் சந்தையில் மொத்தமாக வாங்கி வந்து சில்லறையில் விற்பனை செய்கிறோம், வரத்து அதிகரிப்பால் விலை சரிந்துள்ளது. ஒட்டன்சத்திரம் சந்தையில் டன் கணக்கில் தக்காளி வந்துள்ளதால் விலை பெருமளவு குறைந்து விட்டது என்றனர்.

Advertisement