மைசூரு சாலையில் வெட்டப்பட்ட மரங்கள் மாநகராட்சி செயலுக்கு வலுத்தது எதிர்ப்பு

மைசூரு : 'மைசூரு ஹைதர் அலி சாலையில் புதிய மரக்கன்றுகள் நடப்படும்' என, மைசூரு மாநகராட்சி அறிவித்துள்ளது.
மைசூரு நகரில் போக்குவரத்து அதிகரித்து வருவதால், பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக, சில சாலைகளை அகலப்படுத்த மைசூரு மாநகராட்சியின் சி.டி.பி., எனும் நகர விரிவான மேம்பாட்டு திட்டம் முடிவு செய்தது.
இதில் ஒரு கட்டமாக, வெங்கடலிங்கய்யா சதுக்கத்தில் இருந்து காளிகாம்பா கோவில் வரையிலான, 30 அடி அகல ஹைதர் அலி சாலையை, 90 அடி அகலமாக்க சி.டி.பி., திட்டமிட்டது.
ஆனால், பொது மக்களின் கருத்துகள் எதுவும் கேட்காமல், அவசர அவசரமாக சாலையின் இருபுறத்திலும் இருந்த மரங்களை, இம்மாதம் 14ம் தேதி வெட்டித் தள்ளியது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிழல் கொடுத்து வந்த மரங்கள் வெட்டப்பட்டதை பார்த்த அப்பகுதி மக்கள், இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மைசூரு மாநகராட்சியின் செயலுக்கு கண்டனம் வலுத்தது. மரம் வெட்டப்பட்டதை கண்டித்து, இயற்கை ஆர்வலர்கள், இப்பகுதியினர், சங்கத்தினர், அமைப்பினர் என பலரும் நேற்று முன்தினம் இரவு மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்தினர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்றனர்.
மக்களின் போராட்டத்திற்கு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர். மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார், ''மரங்கள் வெட்டுவதற்கு முன்பு, மக்களின் கருத்துகளை கேட்டிருக்க வேண்டும்,'' என்றார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மாநகராட்சி கமிஷனர் பசவராஜு கூறுகையில், ''மரங்கள் வெட்டப்பட்ட சாலையில், வனத்துறை விதிகளின்படி மரங்கள் நடப்படும்,'' என்றார்.
மேலும்
-
மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை: ரூ.110 கோடியில் பணி விரைவில் துவக்கம்
-
'அவுரங்கசீப் மதவெறி பிடித்தவர் என நேருவே குறிப்பிட்டுள்ளார்': ராஜ்நாத் சிங்
-
செய்திகள் சில வரிகளில்
-
காதலிக்காக என்னை தேர்ச்சி பெற வையுங்கள்; விடைத்தாளுடன் ரூ.500 அனுப்பிய மாணவன்
-
ஆசிரியரிடம் ரூ.15,000 லஞ்சம் பிளாக் கல்வி அதிகாரி கைது
-
பைக் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் தந்தை, மகள் பலி